Thursday, May 13, 2010

எண்ணங்களை கவிதைகளால் நிரப்புகிறாய்
மனதை லேசாக வைக்கிறாய்
உன் பெயர்தான் காதலோ...

Friday, May 7, 2010

பல்லுக்கு ரின்னும்,
கண்ணனுக்கு டுரோசெல்லும் அணிவாயா..
இதனை பிரகாசமாய் ஒளிர்வதற்கு ...

Wednesday, May 5, 2010

நீண்ட சாலையில்..
நெடிய பயணத்தில்...
ஆற்றங்கரை நில ஒளியில்...
பனி பொழியும் அதிகாலையில்..
மாலை நேரத்தில் மலை பாதையில்..
கடற்கரை மணலில்..
வாழ்கை முழுவதும் உன் கரம் பற்றி காதலிக்க வேண்டும் ..
நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்...
உன்னை சுற்றும் காற்று நான்..
நிலா போல நீ உனக்கான அன்பை நீ தேய்த்து கொண்டாலும்
அது மீண்டும் மீண்டும் என் மனதில் வளர்பிறையாகவே தோன்றி...
முழு மதி நிலவாக நிற்கின்றது...
சில நேரம் வெண்மேகங்கள் மறைத்தாலும்..
உனக்கான வருகையை நான் எதிர்நோக்கியே உள்ளேன்..

Friday, February 6, 2009

இமை அசைவையும் ரசித்தேன்...

இதழ் மூடுகயிலும் ரசித்தேன்...

தேன் சிந்தும் போதும் ரசித்தேன்...

தேவதை நடையுளும் அசந்தேன்...

என் தேகம் முழுதும் இவளின் ஸ்பரிசம் உணர்தேன்......

என் தேவதையின் பாதங்களில்......

இனிய மொழி பேசும் இனியாள்

எனது இல்லாள் - தேன்மொழியாள்